வாங்க சமைக்கலாம்
வணக்கம்.என் பெயர் ஜானகி .janakis cafetaria
எனும் food blog எழுத ஆசைக் கொண்ட காரணம்.நான் சாப்பாட்டு ராமி என்பதினால் அல்ல.மற்றவர்களுக்கு செய்து கொடுத்து அவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்தால் ஓர் மகிழ்ச்சி .மற்றவர்களுக்கு செய்து கொடுத்தால் மட்டும் போதாது .அதை அவர்களே செய்து சாப்பிட்டால் அது அவரவர்களுக்கு மகிழ்ச்சி என்பதினால்தான் .அதனால் எனக்கு தெரிந்த சில உணவு recipie களை என்னுடைய blog இல் எழுதி மற்றவர்களையும் expert ஆக்க போகிறேன் .
உணவு நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் கவனித்தோம் என்றால் நாம் இறைவனுடனும் ,பண்டிகைகளுடனும் உணவின் மூலமே இணைக்க பட்டிருக்கிறோம. உதாரணத்திற்க்கு விநாயகர் என்றால் கொழுக்கட்டை,கிருஷ்ணர் என்றால் சீடை,முறுக்கு ,ஹனுமார் என்றால் வடை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.ஏன் அந்த கடவுளுக்கும் அந்த உணவுக்கும் தொடர்பு என்பதை அந்தந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளும்போது தெரிந்து கொள்ளலாம் .
நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் சமையலறையில் அம்மாவை சுற்றி சுற்றி வந்ததினால் (வேறு பொழுதுபோக்கு இல்லாததினால் )அனுபவபூர்வமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.தற்போதுள்ள இளைய சமுதாயத்தினருக்கு (ஆண், பெண் இரு பாலருக்கும் )அந்த அனுபவம் மிகக் குறைவு.படிக்கின்ற காலத்தில் படிப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளின் அழுத்தம் காரணமாக சமையலில் நாட்டம் செலுத்துவதும் இல்லை ,நேரமும் இல்லை.
ஒரு நாள் பள்ளிப்பருவம்,கல்லூரிப்பருவம் நிறைவடைந்து பெண்கள் கணவர் வீட்டிற்கும்,ஆண்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கும் செல்லும் போது ,நம் நாக்கு பழகிய பாரம்பரிய சுவைக்காக ஏங்கும் போதுதான், நாம் நம் பாரம்பரிய உணவை சமைக்க கற்றுக்கொள்ளவில்லையே என வருந்துகிறார்கள்.இனி அந்த வருத்தமோ,கவலையோ வேண்டாம். உங்கள் மனதிற்கினிய,நாவிற்க்கு சுவையான உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளின் செய்முறை விளக்கத்தை janakis cafetaria blog மற்றும் ,youtube channel மூலம் அறுசுவை விருந்தாக அளிக்க இருக்கிறோம்.எங்கள் செய்முறை விளக்கத்தை பார்த்து,படித்து,கேட்டு உங்கள் சமையலறையின் அரசியாக,இளவரசியாக வலம் வர வாழ்த்துகிறோம் .நன்றி.