கும்பகோணம் டிகிரி காபி
காப்பி என்ன பெரிய விஷயமா ? சின்ன குழந்தைகள் கூட போடுவார்கள்,அதற்கெதற்கு இத்தனை முத்தாய்ப்பு? என்று கேட்பது காதில் விழுகிறது .எல்லோரும் காபி போடலாம் ,ஆனால் அதை எல்லோராலும் குடிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
அது சரி அது என்ன கும்பகோணம் டிகிரி காபி .அதில் என்ன சிறப்பு?
சிக்கரி இல்லாத காபி பொடிசேர்த்து பாரம்பரிய பில்டரில் டீகாக்ஷன் போட்டு,தண்ணீர் கலக்காத புதிய பசும்பாலில் கலப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி.அதன் ருசியே தனி.
.
நான் காபி போட்டு ஆஹா ! என்று பாராட்டு வாங்க இருபது வருடங்கள் ஆனது. நாம் தயாரித்த உணவு பொருட்களை மற்றவர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அளவிட முடியாதது.
நான் இப்போது காபி தயாரிக்கும் முறையை படிப்படியாக விளக்கப்போகிறேன் .நீங்களும் அதை முறையாக பின்பற்றி காபி தயாரித்து இப்போதே ஆஹா!பேஷ் ! என்று பாராட்டு மழையினில் நனைந்து மகிழுங்கள்.
சுவையான ,மணமான காபிக்கு முக்கியமானது நல்ல காபி பொடியை தேர்வு செய்வதுதான்.சூப்பர் காபிக்கு சரியான காம்பினேஷன் A பிளான்டேஷன் 50%+B பிளான்டேஷன் 50%.காபி கொட்டை வாங்கி வறுத்து, காபி போடும் சமயத்தில் அவ்வப்போது அரைத்து டிகாக்ஷன் போட்டு காபி கலந்து சாப்பிட்டால் ,அதன் சுவையும் மணமும் சொல்லி மாளாது.
தற்போது இருக்கும் அவசரக்காலகட்டத்தில் காபிகொட்டை வாங்கி வறுத்து அரைத்து காபி போடுவது சற்று சிரமம்தான்.அதனால் வறுத்த கொட்டையாய் வாங்கி, அவ்வப்போது மிக்ஸியில் பொடி செய்துக்கொள்ளலாம் அல்லது A மற்றும் B சரிவிகிதத்தில் கலந்து பொடியாக வாங்கிக்கொள்ளலாம்.காபி எந்த மெஷினில் போட்டாலும் ,நமது பாரம்பரிய காபி பில்டரில் காபி போடும்போது அதன் ருசியே தனி.
3 நபர்களுக்கு காபி தயாரிக்க
தேவையான பொருட்கள்
காபி பொடி (50%A plantation+
50%B plantation ) ----- 3tsp
தண்ணீர் ------200ml
பால் ----400mi
சர்க்கரை --- 4 1/2 tsp
செய்முறை
முதலில் பில்டரை கீழ் பகுதியையும்,மேல் பகுதியையும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கவும்.பிறகு மேல் பகுதியில் காபி பொடியை போட்டு குடையை அதன் மேல் வைத்து அழுத்தவும்.தண்ணீரை நன்றாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஒரு நிமிடம் ஆறியவுடன் அதை பில்டரில் ஊற்றவும். 5நிமிடம் ஆனதும் பில்டரின் கீழ்ப் பகுதியில் வடிந்திருக்கும் டிகாக்ஷனை எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேவையான சர்க்கரையை டிகாக்ஷனில் போட்டு நன்றாக நுரை வரும் வரை ஆற்றவும்.
அடுத்து காபி கலப்பதற்கு தேவையான பாலை புதிதாக காய்ச்சி ,ஆற்றி வைத்துள்ள டிகாக்ஷனுடன் கலக்கவும்.பாரம்பரிய டபரா ,டம்ப்ளரில் ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கவும்.உங்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு அளவே இல்லை . முயற்சித்துத்தான் பாருங்களேன் .
பின்குறிப்பு ;காபியின் சுவையும் ,மணமும் காபி பொடி மற்றும் ,பாலின் தரத்தை பொறுத்தே சிறப்பாக அமையும்.தரமான காபி தயாரிப்பை நேரடியாக பார்த்து அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
அழுத்தவும்.
https://www.youtube.com/watch?v=x3wmjVRpZdY&t=8s
சிக்கரி இல்லாத காபி பொடிசேர்த்து பாரம்பரிய பில்டரில் டீகாக்ஷன் போட்டு,தண்ணீர் கலக்காத புதிய பசும்பாலில் கலப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி.அதன் ருசியே தனி.
.
நான் காபி போட்டு ஆஹா ! என்று பாராட்டு வாங்க இருபது வருடங்கள் ஆனது. நாம் தயாரித்த உணவு பொருட்களை மற்றவர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அளவிட முடியாதது.
நான் இப்போது காபி தயாரிக்கும் முறையை படிப்படியாக விளக்கப்போகிறேன் .நீங்களும் அதை முறையாக பின்பற்றி காபி தயாரித்து இப்போதே ஆஹா!பேஷ் ! என்று பாராட்டு மழையினில் நனைந்து மகிழுங்கள்.
சுவையான ,மணமான காபிக்கு முக்கியமானது நல்ல காபி பொடியை தேர்வு செய்வதுதான்.சூப்பர் காபிக்கு சரியான காம்பினேஷன் A பிளான்டேஷன் 50%+B பிளான்டேஷன் 50%.காபி கொட்டை வாங்கி வறுத்து, காபி போடும் சமயத்தில் அவ்வப்போது அரைத்து டிகாக்ஷன் போட்டு காபி கலந்து சாப்பிட்டால் ,அதன் சுவையும் மணமும் சொல்லி மாளாது.
தற்போது இருக்கும் அவசரக்காலகட்டத்தில் காபிகொட்டை வாங்கி வறுத்து அரைத்து காபி போடுவது சற்று சிரமம்தான்.அதனால் வறுத்த கொட்டையாய் வாங்கி, அவ்வப்போது மிக்ஸியில் பொடி செய்துக்கொள்ளலாம் அல்லது A மற்றும் B சரிவிகிதத்தில் கலந்து பொடியாக வாங்கிக்கொள்ளலாம்.காபி எந்த மெஷினில் போட்டாலும் ,நமது பாரம்பரிய காபி பில்டரில் காபி போடும்போது அதன் ருசியே தனி.
3 நபர்களுக்கு காபி தயாரிக்க
தேவையான பொருட்கள்
50%B plantation ) ----- 3tsp
தண்ணீர் ------200ml
பால் ----400mi
சர்க்கரை --- 4 1/2 tsp
செய்முறை
முதலில் பில்டரை கீழ் பகுதியையும்,மேல் பகுதியையும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கவும்.பிறகு மேல் பகுதியில் காபி பொடியை போட்டு குடையை அதன் மேல் வைத்து அழுத்தவும்.தண்ணீரை நன்றாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஒரு நிமிடம் ஆறியவுடன் அதை பில்டரில் ஊற்றவும். 5நிமிடம் ஆனதும் பில்டரின் கீழ்ப் பகுதியில் வடிந்திருக்கும் டிகாக்ஷனை எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேவையான சர்க்கரையை டிகாக்ஷனில் போட்டு நன்றாக நுரை வரும் வரை ஆற்றவும்.
அடுத்து காபி கலப்பதற்கு தேவையான பாலை புதிதாக காய்ச்சி ,ஆற்றி வைத்துள்ள டிகாக்ஷனுடன் கலக்கவும்.பாரம்பரிய டபரா ,டம்ப்ளரில் ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கவும்.உங்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு அளவே இல்லை . முயற்சித்துத்தான் பாருங்களேன் .
அழுத்தவும்.
https://www.youtube.com/watch?v=x3wmjVRpZdY&t=8s
No comments:
Post a Comment