Tuesday, 17 January 2017

How to prepare kumbakonam degree coffee?

                                   

                     கும்பகோணம் டிகிரி காபி

  காப்பி என்ன பெரிய விஷயமா ? சின்ன குழந்தைகள் கூட போடுவார்கள்,அதற்கெதற்கு இத்தனை முத்தாய்ப்பு? என்று கேட்பது காதில் விழுகிறது .எல்லோரும் காபி போடலாம் ,ஆனால் அதை எல்லோராலும் குடிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

அது சரி அது என்ன கும்பகோணம் டிகிரி காபி .அதில் என்ன சிறப்பு?
சிக்கரி இல்லாத காபி பொடிசேர்த்து பாரம்பரிய  பில்டரில்   டீகாக்ஷன் போட்டு,தண்ணீர் கலக்காத புதிய பசும்பாலில் கலப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி.அதன் ருசியே தனி.
.
நான் காபி போட்டு ஆஹா ! என்று பாராட்டு வாங்க இருபது வருடங்கள் ஆனது. நாம்  தயாரித்த உணவு பொருட்களை மற்றவர்கள் பாராட்டும்போது  நமக்கு கிடைக்கும்  மகிழ்ச்சி இருக்கிறதே  அளவிட  முடியாதது.

நான் இப்போது காபி தயாரிக்கும் முறையை படிப்படியாக விளக்கப்போகிறேன் .நீங்களும் அதை முறையாக பின்பற்றி காபி தயாரித்து இப்போதே ஆஹா!பேஷ் ! என்று பாராட்டு மழையினில் நனைந்து மகிழுங்கள்.

சுவையான ,மணமான காபிக்கு முக்கியமானது நல்ல காபி பொடியை தேர்வு செய்வதுதான்.சூப்பர்  காபிக்கு சரியான காம்பினேஷன்   A பிளான்டேஷன் 50%+B பிளான்டேஷன் 50%.காபி கொட்டை வாங்கி வறுத்து, காபி போடும் சமயத்தில் அவ்வப்போது அரைத்து டிகாக்ஷன் போட்டு காபி கலந்து சாப்பிட்டால் ,அதன் சுவையும் மணமும் சொல்லி மாளாது.


தற்போது இருக்கும் அவசரக்காலகட்டத்தில் காபிகொட்டை வாங்கி வறுத்து அரைத்து காபி போடுவது சற்று சிரமம்தான்.அதனால் வறுத்த கொட்டையாய் வாங்கி, அவ்வப்போது மிக்ஸியில் பொடி செய்துக்கொள்ளலாம் அல்லது A மற்றும் B சரிவிகிதத்தில் கலந்து பொடியாக வாங்கிக்கொள்ளலாம்.காபி எந்த மெஷினில் போட்டாலும் ,நமது பாரம்பரிய காபி பில்டரில் காபி போடும்போது அதன் ருசியே தனி.

 3 நபர்களுக்கு காபி தயாரிக்க                                                               
தேவையான  பொருட்கள் 
காபி பொடி (50%A plantation+
                             50%B plantation ) ----- 3tsp 
தண்ணீர்                                        ------200ml  
 பால்                                                    ----400mi 
சர்க்கரை                                          ---  4 1/2 tsp


செய்முறை


 முதலில் பில்டரை கீழ் பகுதியையும்,மேல் பகுதியையும் ஒன்றன் மேல் ஒன்று வைக்கவும்.பிறகு மேல் பகுதியில் காபி பொடியை போட்டு குடையை அதன் மேல்           வைத்து அழுத்தவும்.தண்ணீரை நன்றாக           கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஒரு      நிமிடம்  ஆறியவுடன் அதை பில்டரில்    ஊற்றவும். 5நிமிடம் ஆனதும் பில்டரின் கீழ்ப்     பகுதியில் வடிந்திருக்கும்  டிகாக்ஷனை எடுத்து  வைத்துக்கொள்ளவும். பிறகு   தேவையான   சர்க்கரையை டிகாக்ஷனில்    போட்டு நன்றாக நுரை வரும் வரை   ஆற்றவும்.



அடுத்து காபி கலப்பதற்கு தேவையான  பாலை   புதிதாக காய்ச்சி ,ஆற்றி வைத்துள்ள     டிகாக்ஷனுடன் கலக்கவும்.பாரம்பரிய டபரா        ,டம்ப்ளரில் ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கவும்.உங்களுக்கு கிடைக்கும்  பாராட்டிற்கு அளவே இல்லை . முயற்சித்துத்தான் பாருங்களேன் .

பின்குறிப்பு ;காபியின்  சுவையும் ,மணமும் காபி பொடி மற்றும் ,பாலின் தரத்தை பொறுத்தே சிறப்பாக அமையும்.தரமான காபி தயாரிப்பை நேரடியாக பார்த்து அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை 
அழுத்தவும்.

 https://www.youtube.com/watch?v=x3wmjVRpZdY&t=8s












                                          




 
 












                            





















 












Friday, 13 January 2017

கம கம காபி

                                     கம கம காபி 
                             
                                   நமது janakis cafetaria blog ஐ காபியில் இருந்து ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .ஏன் என்றால் caffetaria என்றால் காப்பிதான் முக்கியம் .எனக்கு காபி பிடிக்காது என்பவர்கள் மிகக்  குறைவு .காலை எழுந்தவுடன் காபி இதுதான் எல்லோருடைய புதுக்கவிதை .காபியைப் பற்றி பல விதமான கருத்துக்கள் காபி ஆரோக்கியத்திற்கு  நல்லது ,காபி ஆரோக்கியத்திற்கு கெடுதல் இப்படி எத்தனையோ கருத்துக்கள்.இருந்தாலும் நாம் யாரும் காபியை விடுவதாய் இல்லை.காபியை ரசித்து ருசித்து குடித்தால் மட்டும் போதுமா ?காபியின் வரலாறும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


                                   ஒன்பதாம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவில் கல்தி (Khaldi ) எனும் ஆடு மேய்ப்பவரால் காபி கண்டறியப்பட்டது.அவர் ஆடு மேய்க்கும்போது ஆடுகள் குறிப்பிட்ட செடியின் பழங்களை சாப்பிட்டபின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை கண்டறிந்தார் .பிறகு அப்பழத்தின் விதைகளில் இருந்து ஒரு புதிய பானம் தயாரித்து ,குடித்து அதுவும் உடலுக்கு சுறுசுறுப்பு அளிப்பதை கண்டறிந்தார்.அதுவே நாம்  இப்போது பருகும்  காபி .

Teddy  Roosevelt 

.உலகிலேயே அதிகம் விற்பனையாகும்  திரவங்களில் காபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.முதல் இடம் கச்சா எண்ணை (crude ஆயில்).

டெட்டி ரூஸ்வெல்ட்  ( Teddy Roosevelt )என்பவர்   ஒரு நாளைக்கு ஒரு கேலன் (gallon )காபி  குடிப்பாராம்.. அதற்க்காக நாம் அதை முயற்சிக்கக் கூடாது.எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.எனவே ஒரு  நாளைக்கு ஒரு முறை சுவையான காபியைக் குடித்து திருப்தி அடைவோம்.இப்போது சுவையான காபியை எப்படி தயாரிப்பது என்று அடுத்த
 blog இல்  பார்க்கலாம்.
                                            

                                            தொடர்ந்து சந்திக்கலாம் .


Tuesday, 10 January 2017

vaanga samaikkalam

                              வாங்க சமைக்கலாம் 


                     வணக்கம்.என் பெயர் ஜானகி .janakis  cafetaria
 எனும் food blog எழுத ஆசைக் கொண்ட காரணம்.நான் சாப்பாட்டு ராமி என்பதினால்  அல்ல.மற்றவர்களுக்கு செய்து கொடுத்து அவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்தால் ஓர் மகிழ்ச்சி .மற்றவர்களுக்கு செய்து கொடுத்தால் மட்டும் போதாது .அதை அவர்களே செய்து சாப்பிட்டால் அது அவரவர்களுக்கு மகிழ்ச்சி என்பதினால்தான்  .அதனால் எனக்கு தெரிந்த சில உணவு recipie களை என்னுடைய blog இல் எழுதி மற்றவர்களையும் expert ஆக்க போகிறேன் .

                        உணவு நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் கவனித்தோம் என்றால் நாம் இறைவனுடனும் ,பண்டிகைகளுடனும் உணவின் மூலமே இணைக்க பட்டிருக்கிறோம. உதாரணத்திற்க்கு விநாயகர் என்றால் கொழுக்கட்டை,கிருஷ்ணர் என்றால் சீடை,முறுக்கு ,ஹனுமார் என்றால் வடை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.ஏன் அந்த கடவுளுக்கும் அந்த உணவுக்கும் தொடர்பு என்பதை அந்தந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளும்போது தெரிந்து கொள்ளலாம் .

                                நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் சமையலறையில் அம்மாவை சுற்றி சுற்றி வந்ததினால் (வேறு பொழுதுபோக்கு இல்லாததினால் )அனுபவபூர்வமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.தற்போதுள்ள இளைய சமுதாயத்தினருக்கு (ஆண், பெண் இரு பாலருக்கும் )அந்த அனுபவம் மிகக் குறைவு.படிக்கின்ற காலத்தில் படிப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளின் அழுத்தம் காரணமாக சமையலில் நாட்டம் செலுத்துவதும் இல்லை ,நேரமும் இல்லை.

                                 ஒரு நாள் பள்ளிப்பருவம்,கல்லூரிப்பருவம் நிறைவடைந்து பெண்கள் கணவர் வீட்டிற்கும்,ஆண்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கும் செல்லும் போது ,நம் நாக்கு பழகிய பாரம்பரிய சுவைக்காக ஏங்கும் போதுதான், நாம் நம் பாரம்பரிய உணவை சமைக்க கற்றுக்கொள்ளவில்லையே என வருந்துகிறார்கள்.இனி அந்த வருத்தமோ,கவலையோ வேண்டாம். உங்கள் மனதிற்கினிய,நாவிற்க்கு சுவையான உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளின் செய்முறை விளக்கத்தை janakis cafetaria blog மற்றும்  ,youtube channel மூலம் அறுசுவை விருந்தாக அளிக்க இருக்கிறோம்.எங்கள் செய்முறை விளக்கத்தை பார்த்து,படித்து,கேட்டு உங்கள் சமையலறையின் அரசியாக,இளவரசியாக வலம் வர வாழ்த்துகிறோம் .நன்றி.